நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் கா.கருணாநிதி வெற்றி பெற்றார். இந்த நிலையில், கயத்தாறு அரசன்குளத்தைச் சேர்ந்த கருப்பசாமி (64) என்பவர், திமுக வெற்றி பெற்றால் மொட்டை அடிப்பேன் என வைத்திருந்த வேண்டுதலை நிறைவேற்றும் விதமாக கோயிலில் மொட்டை அடித்துக் கொண்டார். திமுக ஆட்சியை இழந்தாலும், தங்கள் தொகுதியில் எம்எல்ஏ வெற்றி பெற்றதாக தொண்டர்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.