மதிமுக, மமகவோடு நாளை திமுக ஆலோசனை

தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்த நாளை (பிப்., 23) மதிமுகவுக்கும், மனிதநேய மக்கள் கட்சிக்கும் திமுக அழைப்பு விடுத்துள்ளது. கடந்த 2021 தேர்தலில் மதுரை தெற்கு, வாசுதேவநல்லூர் (தனி), சாத்தூர், அரியலூர், பல்லடம், மதுராந்தகம் (தனி) ஆகிய 6 தொகுதிகள் மதிமுகவுக்கும், பாபநாசம், மணப்பாறை என 2 தொகுதிகள் மமகவுக்கும் ஒதுக்கப்பட்டன. இரு கட்சிகளும் உதயசூரியன் சின்னத்திலே தேர்தலை சந்தித்தன. இந்த சூழலில் தேமுதிக வருகையில் மதிமுகவுக்கு சீட் குறைக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்தி