தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் திமுக 170 தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் திமுக 163 தொகுதிகளில் நேரடியாகவும், கூட்டணி கட்சிகள் 7 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், திமுக கூட்டணிக் கட்சிகளுக்கு மொத்தம் 71 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.