சென்னை மதுரவாயலில் தவெக–திமுக ஆதரவாளர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. தவெகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்த சமீர் என்பவர் விஜய் மற்றும் தவெகவினரை அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்ததால், ஆத்திரமடைந்த தவெகவினர் அவரது வீட்டிற்கு சென்றுள்ளனர். தகராறு கைகலப்பாக மாறிய நிலையில், சமீரின் வீட்டு உரிமையாளர் ரமேஷ், இருதரப்பினரையும் பிரிக்க முயன்றார். அப்போது ஒருவர் அவரை முகத்தில் குத்தியதால் அவரது மூக்கு உடைந்து ரத்தம் சிந்தியது.