திமுக, தவெகவினர் செருப்பை வீசி மாறி மாறி தாக்குதல்

எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து தஞ்சையில் திமுகவினர் போராட்டம் நடத்தி வரும் நிலையில், உதயநிதியை கண்டித்து தவெகவினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இரு கட்சியினரும் ஒரே இடத்தில் திரண்டு மாறி மாறி செருப்புகளை வீசி தாக்குதலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவுகிறது. முதலமைச்சர் விஜய்யை ஆபாசமாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் தஞ்சை போலீசார் உதயநிதியை இன்று கைது செய்தனர். அவரை தஞ்சை கொண்டு சென்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்.

தொடர்புடைய செய்தி

✕
✕