கூட்டணி குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ்தான் முடிவு செய்வார் என்று அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்ரீகாந்தி தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசியுள்ள அவர், 'கட்சி இரண்டாக இருக்கும் நிலையில், அன்புமணியுடன் அதிமுக கூட்டணி வைத்திருப்பது சரியான நடைமுறை அல்ல. ஒரே பாமகதான். ஐயா இருப்பதுதான் பாமக. அனைத்து குழப்பத்துக்கும் ஒரு வாரத்தில் முடிவை ஐயா கூறிவிடுவார்' என்று தெரிவித்தார். பாமக (ராமதாஸ்) தரப்பு திமுக அல்லது தவெக பக்கம் செல்ல வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.