சட்டமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், மாற்றுக்கட்சியை சேர்ந்த தொண்டர்களை அதிமுக பக்கம் இழுக்கும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். இந்நிலையில், கரூர் மாவட்டத்தை சேர்ந்த திமுக,காங்கிரஸ் மற்றும் தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் அக்கட்சிகளில் இருந்து விலகி அதிமுகவில் இணைத்துள்ளதாக விஜயபாஸ்கர் தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.