திமுகவைக் 'காரியப் பூனை' எனக் கடுமையாக விமர்சித்துத் தமிழக வெற்றிக் கழகத்தின் IT விங் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஆட்சியில் இருக்கும்போது சத்தம் போட்டுவிட்டுப் பின்னர் அமைதியாகிவிடும் திமுக, மத்திய அரசில் காவிரி விவகாரத்திற்காக ஒரு பதவியையாவது துறந்ததா எனக் கேள்வி எழுப்பியுள்ளது. தேர்தல் தோல்விக்குப் பின் தனிமைப்பட்டு விரக்தியில் இருக்கும் திமுகவின் கபட நாடகத்தை மக்கள் ஏற்கமாட்டார்கள் என்றும் அதில் சாடப்பட்டுள்ளது.