தேர்தல் முடிவுகள் குறித்து கள ஆய்வு செய்ய திமுக குழு நியமனம்

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து கள ஆய்வு செய்வதற்காக 36 பேர் கொண்ட குழுவை திமுக தலைமை அமைத்துள்ளது. இக்குழுவானது, தொகுதிவாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு திமுக மாவட்டச் செயலாளர்கள், வேட்பாளர்கள், தொகுதிப் பார்வையாளர்கள் நிர்வாகிகள் மற்றும் திமுக தொண்டர்களை நேரடியாகச் சந்தித்து கருத்துகளையும் அவர்களின் பரிந்துரைகளையும் பெறவுள்ளது. கள ஆய்வு அறிக்கையை ஜூன் 5ஆம் தேதிக்குள் திமுக தலைவரரிடம் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி