முதலமைச்சர் விஜய் கூட்டிய எம்பிக்கள் கூட்டத்தைப் புறக்கணித்தது குறித்து கனிமொழி எம்.பி செய்தியாளர் சந்திப்பில் பேசினார். அப்போது, "திமுக தொகுதி மறுவரையறையை எதிர்க்கவில்லை; அநியாயமான வரைமுறையையே எதிர்க்கிறது" எனத் தெரிவித்துள்ளார். நியாயமான தொகுதி மறுசீரமைப்பு வர வேண்டும் என்பதும், தமிழ்நாட்டின் நலனைப் பாதுகாப்பதுமே திமுகவின் எண்ணம் என்றார். காவிரி பிரச்சினையிலிருந்து கவனத்தைத் திருப்பவே இக்கூட்டம் நடத்தப்படுவதாகச் சாடிய அவர், தேர்தலை விட மாநில நலனே முக்கியம் எனக் கூறினார்.
நன்றி: பாலிமர்