திமுகவின் இடைக்கால பட்ஜெட் வார்த்தை ஜாலங்கள் நிறைந்தது: EPS

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, திமுக அரசின் இடைக்கால பட்ஜெட்டை கடுமையாக விமர்சித்தார். 2021 தேர்தல் வாக்குறுதிகளில் நான்கில் ஒரு பங்கும் நிறைவேற்றப்படவில்லை என்றும், பட்ஜெட் வார்த்தை ஜாலம் மட்டுமே என்றும் கூறினார். ரகுராம் ராஜன் குழுவுக்குப் பிறகு கடன் உயர்ந்ததாகவும், மாநில வருவாய் ரூ.26,000 கோடி குறைந்துள்ளதாகவும், விவசாயிகள் ஏமாற்றப்பட்டதாகவும் குற்றம்சாட்டினார்.

தொடர்புடைய செய்தி