தவெகவை தூற்றுவதே திமுகவின் இலக்கு.. விஜய் காட்டம்

தவெகவை மட்டும் மூளையில் தேக்கி யோசிப்பதே திமுகவின் முழுநேர வேலை என்றாகிவிட்டது என்று தவெக தலைவர் விஜய் விமர்சித்துள்ளார். திமுகவின் நடவடிக்கை குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், 'ஆட்சி அதிகாரத்தில் இருந்து அதிவிரைவில் மக்களால் தூக்கி எறியப்படப் போகும் அதிகார மமதை கொண்ட கட்சி ஒன்று, அவசர கதியில் தனக்குப் பழக்கமான அவதூறு அரசியல் ஆட்டத்தைத் தொடங்கி உள்ளது. அவதூறு ஒன்றையே அடிப்படை அரசியல் கோட்பாடாகக் கொண்ட கட்சி' என்று சாடியுள்ளார்.

தொடர்புடைய செய்தி