நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை மற்றும் மகளிர் இடஒதுக்கீடு தொடர்பாக மத்திய பாஜக அரசு கொண்டுவர உள்ள புதிய அரசியல் சாசனத் திருத்த மசோதாவுக்கு திமுக நிபந்தனைகளுடன் ஆதரவு தெரிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தின் தற்போதைய 7.18% நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் குறையக்கூடாது என்ற திமுகவின் கோரிக்கைகள் புதிய மசோதாவில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் மசோதாவுக்கு ஆதரவளிப்பது குறித்து திமுக தலைமை பரிசீலித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.