விழுப்புரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் பிப்ரவரி மாதம் 8ம் தேதி திமுக தேர்தல் முகவர்கள் மாநாடு நடைபெறுகிறது. தேர்தல் நெருங்குவதால் பிப்ரவரி மாதம் முழுவதும் மாநாடுகளை நடத்த திமுக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் திமுக இளைஞரணி மாநாடு, மகளிர் அணி மாநாடு என நடந்த நிலையில் தற்போது தேர்தல் முகவர்கள் மாநாடு நடைபெறுகிறது.
நன்று: நியூஸ் தமிழ்