வரவிருக்கும் உட்கட்சி தேர்தலுக்கு முன்பாக 110 மாவட்ட பொறுப்பாளர்களை நியமிக்க திமுக தலைமை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக 3 நாட்களுக்குள் ஒன்றியம், வட்டம், பேரூர் மற்றும் பகுதிகளை பிரித்து தலைமைக்கு சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், இதில் தவறு இருக்கும் பட்சத்தில் அதை சரிசெய்ய கட்சி சார்பற்ற குழுவிடம் ஆய்வை ஒப்படைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேவேளையில், மாவட்ட செயலாளர்களின் வயது வரம்பை 75 ஆக உயர்த்த வேண்டும் என்ற பரிந்துரையை திமுக தலைமை நிராகரித்து விட்டதாகவும் கூறப்படுகிறது.
நன்றி:News18