12 தொகுதிகள் கேட்கப்பட்ட நிலையில் மநீம-யத்திற்கு 2 மட்டுமே ஒதுக்க திமுக திட்டம்

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கமல்ஹாசனின் மநீம, தொகுதி பங்கீடு தொடர்பாக இன்று (மார்ச் 4) அண்ணா அறிவாலயத்தில் முதற்கட்ட பேச்சுவார்த்தையை நடத்தியது. அப்போது மநீம தரப்பில் 12 தொகுதிகள் வரை கோரப்பட்ட நிலையில், புதிய கூட்டணி கட்சிகளையும் சரிக்கட்ட வேண்டியிருப்பதால் 2 இடங்களை மட்டுமே ஒதுக்க திமுக தலைமை திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறைவான இடங்களையே ஒதுக்க திமுக விரும்புவதால், அடுத்தகட்ட பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு எட்டப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்தி