திமுக - நாதக நிர்வாகிகள் மோதல்

திண்டுக்கல் ஆத்தூர் அருகே திமுக, நாதகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. சித்தையன்கோட்டை கடைவீதி திடலில் இன்று (பிப்., 28) நடைபெற்ற நாதக கண்டன ஆர்ப்பாட்டத்தின் போது, அமைச்சர் ஐ.பெரியசாமியை அவதூறாக பேசியதாக கூறி, திமுக நிர்வாகிகள் நாதகவினரை தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறை அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு, இருதரப்பினரையும் கலைத்து சூழலை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

தொடர்புடைய செய்தி