திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை தொகுதியில் திமுக மாவட்டச் செயலாளரான க.தேவராஜி, எம்எல்ஏ-வாக இருக்கிறார். இவர் மீண்டும் ஜோலார்பேட்டை தொகுதியில் போட்டியிட விரும்பாமல், தொகுதி மாறும் திட்டத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த தேர்தலில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணியை வீழ்த்தி வெற்றிபெற்றார். ஆனால், எம்எல்ஏ ஆன பிறகு தொகுதி பக்கம் எட்டிக்கூட பார்க்கவில்லை என குற்றம்சாட்டப்படுகிறது. இதனால், கே.சி.வீரமணிக்கு ஆதரவாக மக்கள் இருப்பதாக கூறப்படுகிறது.