மதுரை திமுக தெற்கு மாவட்டச் செயலாளரும், திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினருமான சேடப்பட்டி மணிமாறன் உடல்நலக்குறைவால் சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை நேற்று (மே 15) சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், திமுக மாநில இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். மணிமாறன் பூரண நலம்பெற்று கட்சிப்பணி மற்றும் மக்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என விருப்பம் தெரிவித்தார்.