பனையூர் தவெக எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, "கொளத்தூர் சென்ற முதலமைச்சரால் அன்று சேப்பாக்கம் செல்ல முடியாமல் போனது மிஸ் ஆகிவிட்டது. ஆபாசமாக பேசிய உதயநிதியை கைது செய்து மொத்த திமுகவுக்கே முதல்வர் விஜய் பாடம் எடுத்துள்ளார். 'வாய் திறங்க சி.எம்' என பேட்ஜ் குத்தி வந்தவர்கள், முதல்வர் பேசத் தொடங்கியதும் ஓடிவிட்டனர். திமுகவின் சாம்ராஜ்யம் முடிந்துவிட்டதை அவர்கள் உணர 6 மாதங்கள் ஆகும்" என்றார்.