‘காவலரை தாக்கியது திமுகவினர் அல்ல’ - வேளச்சேரி போலீஸ் தகவல்

சென்னையில், அமைச்சர் மா. சுப்பிரமணியன் கலந்து கொள்ளவிருந்த விழாவில், ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை காவலர் காமராஜ் சரிசெய்து கொண்டிருந்தார். அவரை போதையில் இருந்த திமுகவினர் தாக்கியதாக செய்திகள் வெளியாகின. இதற்கு பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்திருந்தார். இந்நிலையில், காவலரை தாக்க முயன்றவர்கள் திமுகவினர் அல்லஎன வேளச்சேரி போலீசார் விளக்கம் கொடுத்துள்ளனர்.

நன்றி: polimernews

தொடர்புடைய செய்தி