தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது. இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியுடனான இன்றைய ஆலோசனையானது வரும் பிப்.27-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நேற்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) கட்சியுடனும், இன்று (பிப்.23) மனிதநேய மக்கள் கட்சியுடனும் திமுக குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ள சூழலில், மநீம கட்சியுடனான சந்திப்பு தள்ளிப்போயுள்ளது.
நன்றி:NewsTamil