2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் குறித்து நக்கீரன் இதழ் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில், சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள 30 தொகுதிகளையும் திமுக கூட்டணியே முழுமையாகக் கைப்பற்றும் எனத் தெரியவந்துள்ளது. இத்தொகுதிகளில் அதிமுக இரண்டாம் இடத்தைப் பிடிக்கும் எனவும், புதிதாகக் களமிறங்கும் விஜய்யின் தவெக 7% முதல் 16% வரையிலான வாக்குகளைப் பெறும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.