மீண்டும் திமுக ஆட்சிக்கு வர வாய்ப்பு - ஓபிஎஸ் தடாலடி

மீண்டும் திமுக ஆட்சிக்கு வர வாய்ப்புள்ளதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தது அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தலைமைச் செயலக வளாகத்தில் இன்று (பிப்., 20) செய்தியாளர்களிடம் பேசிய அவர், '5 ஆண்டுகள் ஆட்சி நிறைவுபெற்றதையொட்டி முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்தேன். தமிழக மக்கள் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார்களோ அதையே MLA ஐயப்பன் பேசியுள்ளார்' என்று தெரிவித்தார். திமுகவில் இணைய போகிறீர்களா என்ற கேள்விக்கு, 'பொறுத்திருங்கள்' எனக்கூறியதால், விரைவில் அவர் திமுகவில் இணைய வாய்ப்புள்ளதாக பேசப்படுகிறது.

தொடர்புடைய செய்தி