வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் இருந்து திமுக மற்றும் தேமுதிக ஆகிய கட்சிகள் வெளிநடப்பு செய்தன. செய்தியாளர்களைச் சந்தித்த திமுக சட்டத்துறை இணைச்செயலாளர் பரந்தாமன், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உடனடியாக பதவி விலக வேண்டும் என்றார். மேலும், 74 லட்சம் வாக்காளர்களை எஸ்ஐஆர் மூலம் நீக்கிய விவகாரத்தில், அவர்களை எப்போது மீண்டும் இணைப்பீர்கள் எனக் கேள்வி எழுப்பிவிட்டு வெளியேறியதாக தெரிவித்தார்.
நன்றி: கலைஞர் செய்திகள்