தேர்தல் முடிவுகள் தொடர்பாகவும், எதிர்கால அரசியல் பணிகள் குறித்து கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்களின் கருத்துகளை அறியவும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இணையதளம் வாயிலாக கருத்துக்கேட்டு வருகிறார். அதற்காக ‘உடன்பிறப்பின் குரல்’ என்ற இணையதளம் http://udanpirapinkural.in உருவாக்கப்பட்டுள்ளது. இதில் நீங்கள் வெளிப்படையாக உங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம் என தலைமை கூறியுள்ளது.