25 ஆண்டுகளாகத் திமுகவிற்காக உழைத்தோம், தகுதி இல்லாதவர்களுக்குப் பதவிகள் வழங்கப்படுகின்றன என்று மு.க.அழகிரியின் தீவிர ஆதரவாளராக இருந்து அதிமுகவில் தற்போது இணைந்துள்ள எஸ்.ஆர்.கோபி தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று (பிப்., 19) பேசிய அவர், தற்போது திமுக முதல்வர் ஸ்டாலினின் கட்டுப்பாட்டில் இல்லை. அது சபரீசன் மற்றும் அவரது தரப்பினரின் கைகளில்தான் உள்ளது. திமுகவில் உண்மை உழைப்பு விசுவாசத்திற்கு மதிப்பில்லை என்பதால் என்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டேன் என்றார்.
நன்றி: Pttv