ஆதவ் அர்ஜுனாவை விஜய்யிடம் அனுப்பியதே திமுகதான் என அவரது மைத்துனர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் கூறியுள்ளார். சமீபத்தில் இதுகுறித்து பேசிய அவர், "தவெக எந்த கூட்டணியிலும் சேராமல் தனியாக இருக்க வைக்க வேண்டும் என்பதை பார்த்துக் கொள்வதற்காகவே அனுப்பி வைக்கப்பட்டவர்கள் தான் ஜான் ஆரோக்கியசாமி மற்றும் ஆதவ் அர்ஜூனா. விஜய் வேறு எந்த கூட்டணிக்கும் செல்லாமல் இருந்தாலே நாம் ஜெயித்து விடலாம் என்பது திமுகவின் கணக்கு" என கூறியுள்ளார்.