மதுரை: SIR நடவடிக்கைக்கு எதிராக திமுக கடுமையாக போராடியதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக வாக்குச்சாவடி நிலை முகவர்களுக்கான பயிற்சி மாநாட்டில் பேசிய அவர், “ஒன்றிய அரசின் SIR நடவடிக்கையால் இந்தியாவில் பல கோடி வாக்காளர்கள் நீக்கப்பட்ட போது தமிழ்நாட்டில் ஒரு வாக்காளர்கள் கூட நீக்கப்படாமல் பம்பரமாக உழைத்த இயக்கம் திமுக தான். தற்போது தேர்தல் பணிக்காக திமுகவினர் இடைவெளி இல்லாமல் உழைத்து வருகிறார்கள்” என்றார்.