திமுக கூட்டணி கட்சிகள் குறித்து விமர்சித்து அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசியுள்ளார். அவர் கூறுகையில், “தவெக தலைவர் விஜய்யைப் பார்த்து திமுக பயப்படுகிறது. அதற்காகத்தான், இருக்கிற கட்சி, போன கட்சி, வந்த கட்சி என இடம் இருக்கிறதோ இல்லையோ, எல்லோரையும் சேர்த்து திமுக ‘ஓவர் லக்கேஜ்' ஆகிவிட்டது. ஓவர் லக்கேஜ் வண்டி ஓடாது” என்றார். மேலும், “எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா இருவரின் ஆன்மாவும் ஒரு காலமும் ஓ.பன்னீர்செல்வத்தை மன்னிக்காது. அதற்காக நிச்சயமாக அவருக்கு தண்டனை உண்டு” என்றார்.