திமுக சிறுபான்மையினரை ஏமாற்றுகிறது: ஷேக் தாவூத் குற்றச்சாட்டு

சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுக்கு தமிழ் மாநில முஸ்லிம் லீக் நிபந்தனையற்ற ஆதரவு அளித்துள்ளது. சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள இல்லத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, தமிழ் மாநில முஸ்லிம் லீக் தலைவர் ஷேக் தாவூத் தன்னுடைய கட்சி நிர்வாகிகளுடன் இன்று (பிப்., 24) சந்தித்தார். அப்போது, சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுக்கு தன்னுடைய ஆதரவை தெரிவித்தார். அப்போது, தமிழகத்தில் மீண்டும் ஜெயலலிதாவின் ஆட்சியை அமைக்க தங்களது கட்சி முழுமையாக பாடுபடும் என உறுதி அளித்தார்.

தொடர்புடைய செய்தி