இந்தியா கூட்டணியில் திமுகவும் தேவை, தவெகவும் தேவை என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். அரியலூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், தேசிய அளவில் பாஜகவுக்கு எதிரான ஒரு அணியை கட்டமைக்க வேண்டும். அந்த அணியில் திமுகவும், தவெகவும் இருக்க வேண்டும் என்பது தான் என்னுடைய பார்வை. எனக்கு நோபல் பரிசு கிடைத்தால் வைகோவுக்கு நன்றி சொல்வேன் என கூறினார். திருமாவளவனுக்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கிண்டல் செய்தது குறிப்பிடத்தக்கது.
நன்றி: News18