‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்-னு வள்ளுவர் சொன்னது தான் எங்க வழி’ என்று பதிவிட்ட உதயநிதிக்கு வானதி சீனிவாசன் பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது, “கடவுள் நம்பிக்கைக்கு எதிரானவர்கள் இல்லை என்று கூறிவிட்டு, திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற விடாமல் ஹிந்துக்களின் மனதை புண்படுத்தியது திமுக அரசு. தீண்டாமைக் கொடுமையின் உச்சமாகத் திகழ்ந்த வேங்கைவயல் கிராமத்திற்கு இதுவரை செல்லாமல் 5 ஆண்டுகளாக என்ன செய்தீர்கள்?” என கேள்வி எழுப்பியுள்ளார்.