தமிழ்நாடு அரசு, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.3000 வழங்குவதாக அறிவித்துள்ளது. கடந்த 2021 ஜூன் மாதம் ஆட்சிக்கு வந்த திமுக அரசு 2022ல் பொங்கலுக்கு பணம் வழங்கவில்லை. 2023 மற்றும் 2024 ஆகிய ஆண்டுகளில் ரூ.1000 வழங்கியது. 2025 ஆம் ஆண்டும் பொங்கல் பணம் வழங்கவில்லை. 2021 முதல் இதுவரை ரூ.2000 வழங்கிய நிலையில், தற்போது ரூ.3000 வழங்க உள்ளதால், ஆண்டுக்கு ரூ.1000 என்ற வகையில் திமுக ரூ.5000 வழங்குவதாக பார்க்கப்படுகிறது.