கடந்த திமுக ஆட்சியில் பொதுப்பணித்துறையில் நடந்த நடவடிக்கைகள் குறித்த ஆய்வால் டெண்டர்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து, மே 13 முதல் 22 வரை வெளியிடப்பட்ட குறுகிய கால டெண்டர்களை தற்போதைய அரசு ரத்து செய்துள்ளது. ஊரக வளர்ச்சி, போக்குவரத்து, பொதுப்பணி, சென்னை மாநகராட்சி உள்ளிட்ட பல துறைகளில் விடப்பட்ட 100-க்கும் மேற்பட்ட டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.