புதுக்கோட்டையில் திமுக நிர்வாகிகள் தவெகவில் ஐக்கியம்

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் திமுக நகரச் செயலாளர் முகமது ரிஷா மற்றும் வடக்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் இளைய சூரியன் ஆகியோர் ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைந்தனர். அமைச்சர் ஆனந்த் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்வில் அவர்கள் இணைந்தனர். முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் ஏற்பாட்டிலேயே இவர்கள் தவெகவில் இணைந்ததாகக் கூறப்படும் நிலையில், இந்தத் திடீர் கட்சித் தாவல் திமுக தலைமை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி

✕
✕