“திமுக - தேமுதிக கொள்ளை அடிப்பதற்கான கூட்டணி”.. ராஜேந்திர பாலாஜி

"திமுக - தேமுதிக கொள்கை ரீதியிலான கூட்டணி அல்ல, கொள்ளை அடிப்பதற்கான கூட்டணி" என அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விமர்சித்துள்ளார். சிவகாசியில் இன்று (பிப்.21) பேசிய அவர், “திமுக ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்ற நோக்கில் லட்சிய கூட்டணியை அதிமுக அமைத்து உள்ளது. திமுக ஆட்சியில் அத்தியாவசிய குடும்ப செலவு இரண்டு மடங்கு உயர்ந்து உள்ளது. கோடைக்கு பணம் கொடுத்துள்ளேன் என கூறுவது மக்களை ஏமாற்றும் நாடகம்” என்றார்.

தொடர்புடைய செய்தி