இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர்கள் கூட்டம் இன்று (ஜூன் 7) சனிக்கிழமை காலை 10.30 மணி அளவில், காணொலி காட்சி வாயிலாக நடைபெறவுள்ளது. மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், திமுக உறுப்பினர் சேர்க்கை தொடர்பாகவும் ஆலோசிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. சட்டப்பேரவை தேர்தல் பணிகள் தொடர்பாகவும்,  ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற புதிய உறுப்பினர் சேர்க்கையை தொடங்கவும் அறிவுறுத்தப்படும்.

தொடர்புடைய செய்தி