முதலமைச்சர் விஜய் குறித்த அவதூறு பேச்சுக்காக திமுக கவுன்சிலர் சுதா மன்னிப்பு கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளார். அண்மையில் திமுக நிகழ்ச்சியொன்றில் பேசியபோது சுதா, முதலமைச்சர் குறித்து சர்ச்சைக்குறிய வகையில் பேசியதாக, தவெக நிர்வாகி உதயகுமார் எஸ்பிளனேட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இது தொடர்பான வழக்கில் மன்னிப்பு கோருவதாக அறிவித்த சுதாவுக்கு, பொதுவெளியில் பேசியதால், பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும் என நீதிபதி அறிவுறுத்தினார்.