மயிலாடுதுறை அருகே அறுபத்துமூவர் பேட்டையில் குடிநீர் பிடித்துக் கொண்டிருந்த கற்பகம் என்பவரை முன்விரோதம் காரணமாக எதிர்வீட்டைச் சேர்ந்த திமுக கவுன்சிலர் மகன் அசோக் என்பவர் அரிவாளால் வெட்டியுள்ளார். அதனை தடுக்கச் சென்ற கற்பகத்தின் கணவர் செல்வம், மகன் கவியரசன் ஆகியோரையும் வெட்டியுள்ளார். கற்பகம் குடும்பத்தினர் தன்னை கத்தியால் வெட்டியதாக கூறி மயிலாடுதுறை காவல் நிலையத்தில் அசோக் சரணடைந்துள்ளார்.