திருநெல்வேலி மாநகராட்சி 15-வது வார்டு திமுக கவுன்சிலராக இருந்த அஜய், இன்று தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். நெல்லை சட்டமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.முருகன் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்வு, உள்ளூர் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சர் விஜய்யின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு கட்சியில் இணைந்ததாகக் கூறிய அஜய், இனி தவெக மூலம் மக்கள் பணியைத் தொடரப்போவதாகத் தெரிவித்தார். நெல்லையில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் தவெக-வில் இணைந்து வருவது குறிப்பிடத்தக்கது.