திமுக கூட்டணியில் தேமுதிக, மக்கள் நீதி மய்யம் போன்ற புதிய கட்சிகள் இணைந்துள்ளதால், கூட்டணி கட்சிகள் கடந்த முறையை விட குறைந்த தொகுதிகளை ஏற்க வேண்டும் என திமுக தலைமை வலியுறுத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், கடந்த 2021 தேர்தலில் 25 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ், இந்த முறை கூடுதல் இடங்களை கோருவதால் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தையில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதனால், மற்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடக்கும் சூழலில், காங்கிரஸ் உடனான தொகுதிப் பங்கீட்டை உறுதி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.