ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் பரப்புரையை திமுக தொடங்கியுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 5-ந் தேதி நடைபெற உள்ளது. இத்தொகுதியில் பதிவாகும் வாக்குகள் பிப்ரவரி 8-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, திமுக வேட்பாளராக சந்திரகுமார் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், பெரியார் நகரில் வேட்பாளர் சந்திரகுமார் மற்றும் அமைச்சர் முத்துசாமி ஆகியோர் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.