ராமதாஸ் தரப்பு பாமக, திமுக உடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தியதாக வெளியான தகவலுக்கு திமுக தரப்பு மறுப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து திண்டுக்கலில் இன்று (பிப்.9) செய்தியாளர்களைச் சந்தித்த திமுக அமைச்சர் ஐ.பெரியசாமி, 'கூட்டணி தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் உடன் முதல்வரும் பேசவில்லை, அவரும் பேச்சுவார்த்தை நடத்த வரவில்லை" என விளக்கம் அளித்துள்ளார். இதன்மூலம் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
நன்றி: நியூஸ்18