தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 172 முதல் 179 தொகுதிகள் வரை வென்று மீண்டும் ஆட்சியை தக்கவைக்கும் என ABP நாடு செய்தி நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகளில் தெரியவந்துள்ளது. அதிமுக கூட்டணி 50 முதல் 58 தொகுதிகளும், விஜய்யின் தவெக 4 முதல் 6 இடங்களிலும் வெற்றி பெறும் என தெரிவித்துள்ளது. நாதக ஒரு இடங்களிலும் வெல்ல வாய்ப்பில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. வரும் 23ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர்.