சட்டப்பேரவையில் இன்று பேசிய நிதியமைச்சர் மரிய வில்சன் கதை ஒன்றை கூறியபோது, பொய் என்ற வார்த்தையை பயன்படுத்தினார். அதற்கு பதில் உண்மைக்கு மாறான என்ற வார்த்தை மாற்றிக்கொள்ளும்படி சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் அறிவுறுத்தினார். குறுக்கிட்ட திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு, பேரவையில் ஒரு உறுப்பினர் பொய் சொல்லக்கூடாது என்றுதான் சொல்லக்கூடாதே தவிர, பொய் என்ற வார்த்தையை பயன்படுத்தலாம் என்றார். அதே போல், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், அமைச்சர் மரிய வில்சனுக்கு ஆதரவாக குரல் கொடுத்தார்.