அதிமுகவைச் சேர்ந்த 4 எம்எல்ஏக்கள் தவெகவில் இணைந்ததால், அவர்கள் ராஜினாமா செய்தனர். முதலமைச்சர் விஜய் வெற்றி பெற்ற திருச்சி கிழக்கு தொகுதியும் காலியானது. இவற்றிற்கான இடைத்தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. திமுக, அதிமுக இடைத்தேர்தலில் தங்களுக்குள் போட்டி வேண்டாம் என முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. திமுக, திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட விரும்புகிறது. ஆனால், மதுராந்தகம், தாராபுரம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றதால், அந்த தொகுதிகளில் போட்டியிடாமல், அதிமுகவிற்கு ஆதரவாக செயல்பட திமுக விரும்புகிறதாம்.