சிவகங்கை மாவட்டத்தில், அஜித்குமார் மரணம் தொடர்பாக அம்மாவட்ட முழுவதும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுக-வினர் சார்பாக ஒட்டப்பட்டுள்ளதாக கூறப்படும் அந்த போஸ்டரில், “யார் அந்த அதிகாரி?” என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. அஜித்குமார் மரண வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. இந்த விவகாரத்தில் 5 காவலர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தொடர்ந்து, நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் விசாரணை நடத்தி வருகிறார்.