தேமுதிக திமுக கூட்டணியில் இணைந்திருப்பது பெருமகிழ்ச்சி அளிப்பதாக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். மேலும், "இது திமுக கூட்டணியை மேலும் வலிமையாக்கி, உறுதியான வெற்றிக்கு வழிவகுக்கும். கூட்டணி உடையும் என்ற எதிரிகளின் கனவு சிதறியுள்ளது. முன்னாள் முதல்வர் கருணாநிதி கனவு நனவாகும் வகையில் இந்த இணைவு அமைந்துள்ளது" என அவர் குறிப்பிட்டார்.