அதிமுகவுடன் கூட்டணியில் தேமுதிக 14 இடங்கள் கேட்பதாக தகவல்

தேமுதிகவை கூட்டணிக்குள் கொண்டு வர முயற்சிப்பதாக அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். கூட்டணியில் வருவதற்கு தேமுதிக 14 இடங்கள் கேட்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் அதிமுக தரப்பில் 8 சீட் தர தயார் என கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது. இன்னும் ஓரிரு நாட்களில் முடிவு எட்டப்படும் என இரு கட்சியினரும் எதிர்பார்க்கின்றனர். ஏற்கனவே இக்கூட்டணியில் பாஜக, பாமக, அமமுக, தமமுக, தமாகா உள்ளிட்ட கட்சிகள் உள்ளன.

தொடர்புடைய செய்தி